இந்த உலகத்தில் உடலைப் பாதிக்கக் கூடிய பல்லாயிரக் கணக்கான நோய்கள் உள்ளன. இந்த நோய்களைக் கண்டு கொள்ள பல விதமான பரிசோதனைகள் (இரத்தம், X-ray, Scan) மற்றும் பல உதவுகின்றன. உடல் நோய்களைக் குணப்படுத்த பலவிதமான மருந்துகள் மாத்திரைகளும் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
அனால், இதேபோல், மனதைப் பாதிக்கக்கூடிய மன நோய்களும் பல உள்ளன. ஆனால் இந்த நோய்களைக் கண்டு கொள்ள பலவிதமான பரிசோதனைகள் தேவைப்படுவதில்லை. இரத்த பரிசோதனையின் மூலமாக அல்லது X-ray, Scan மூலமாக – மன நலம் பாதிக்கப்பட்டோர்களைக் கண்டுபிடிக்க முடியாது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் அதிகமாகப் பாடு அனுபவிப்பார்கள் (morbidity). ஏனென்றால், அவர்கள் பார்ப்பதற்கு எல்லாரைப் போல் இயல்பாக (normalஆக) இருப்பதால், அவர்கள் மனதில் / கஷ்டத்தால் உடைக்கப்பட்டவர்கள் என்பதை அவரைச் சுற்றி உள்ளவர்கள் அறியாமல் அவருக்கு அன்புடன் உதவாமல் இருப்பதால் தான். அவர்களுக்கு மருந்து மாத்திரைகளும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படாததாலும் தான், அவர்களுடைய மன நலம் பல வருடங்களாக பாதிக்கப்பட்டு, தன் குடும்பத்திற்கும், நம்முடைய சமுதயத்திற்கும் பயன் இல்லாமல் வாழுகிறார்கள்.
இந்த பகுதில், பல விதமான பிரச்சனைகள் எப்படி மனதை பாதிக்கின்றன என்பதனையும், பாதிக்கப்பட்டதினால் ஏற்படும் விளைவுகளும் / மன அழுத்தங்களும், அதன் அறிகுறிகளை எவ்வாறு நீங்களே கண்டுகொள்ளலாம் என்பதனையும் பார்க்கலாம். இதனை நீங்கள் எல்லோரும் வாசிக்கவேண்டும், பயன் பெற வேண்டும் என விரும்புகிறேன். உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். All your personal information will be kept confidentially and will never be shared with anyone. Best wishes, Dr J J Kumar!