குழந்தைகளுக்கும் மன நலம் பாதிக்கப்படுமா? குழந்தைகள் எப்போதும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டு தான் இருக்கிறார்களே! அவர்களுக்கு மன நலம் நன்றாகத்தான் இருக்கிறது என நினைத்திக்கொண்டிருக்கும் பெற்றோர்களே/ உறவினர்களே…….! நன்றாக கவனயுங்கள்! குழந்தையின் மன நலம் மிகவும் முக்கியமனது, ஏனேனில்:
1) சிறு வயதில் ஏற்படும் மனக் காயங்கள்/ மனக் குழப்பங்கள் – மிகவும் ஆழமாக மனதைத் தாக்கக்கூடியவை.
2) இந்தக் காயங்கள் ஆழமாக குழந்தை மனதை பாதித்தாலும், குழந்தைகளால் வார்த்த்தையால் விவரிக்க முடியாது.
3) மனதில் காயமுற்ற குழந்தை, உடல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக காணப்படும். தலைவலி, வாந்தி, வயிற்று வலி போன்ற (non-specific) symptoms காணப்படும்.
4) மிகவும் முக்கியமாக, இள வயதில் ஏற்படும் மன காயங்கள், ஆழ் மனதுக்குள் செல்வதால், அவைகள் நிரந்தரமாக அவர்களை மாற்றிவிடும். It brings about a personality change.
இந்த காரணங்களால் தான், குழந்தைகள் மன நலம் மிக முக்கியமானது. அதை பேணி காக்க பெற்றோர்களும் / பெரியோர்களும் முன் வர வேண்டும்.