அனேக அடிமைத்தன பழக்கங்கள்(addictions) சிகரெட் பிடிப்பதில் தான் ஆரம்பபமாகிறது. ‘ஒரு சிகரெட் தானே’, ‘ஒரு முறை தானே’ என ‘சும்மா அதில் என்ன இருக்கிறது பார்ப்போம்’ என்று சிறு வயதில் ஆரம்பித்த அனுபவம் பலருக்கு உண்டு. ஆனால் நாளடைவில் சிகரெட் புகைக்காமல் இருக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிட முடியும்.

no-smoking-safety-sign

முதலாவது நாம் ஒரு சிகரெட்டில் என்ன இருக்கிறது என்று பார்பபோம்.

ஒரு சிகரெட் பார்ப்பதற்கு மிகவும் அழகாக வடிவமைத்து விற்கப்படுகிறது. இங்கிலாந்து தேசத்தில் சிகரெட்பெட்டியை அழகுபடுத்தக்கூடாது என்றும், “SMOKING KILLS” என்ற வார்த்தையைப் போட வேண்டும் என்றும் அரசாங்கம் சட்டம் பிறப்பித்தது. மேலும் , புகையினால் வரும் உடல் நோய்களைப் படம் பிடித்து (உதாரணம் :  நுரையீரல் புற்றுநோய்) அதனை சிகரெட் பெட்டியில் போட வைத்தார்கள். ஆனால், இந்தியாவில் பல வகையான சிகரெட் பெட்டிகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளன. Smoking is injurious to health’ என்கிற வாசகத்தை அதில் போடுகிறார்கள்.

ஒரு சிகரெட்டைப்பற்ற வைக்கும் போது, சுமார்4,000 ஆபத்தை விளைவிக்கக்கூடிய வேதிப் பொருட்கள் வெளியிடப்படுகிறது. அவைகளில்:

  • சுமார் 69 வேதிப்பொருட்கள் (Chemicals) புற்று நோயை உண்டாக்க வலிமையுடையது.
  • நூற்றுக் கணக்கான விஷப் பொருட்கள்(Poisons) உள்ளன.
  • Nicotine – மக்களை அடிமைப் படுத்தும் ஒருபொருள்.

புகையில் உள்ள புற்று நோய் உருவாக்கும் வேதிப் பொருட்கள்:

  • Tar – ரோடு போட உதவும் முக்கியப் பொருள்.
  • Arsenic – மரம் சம்பந்தமான பொருட்களைப் பாதுகாக்க உதவும் பொருள்.
  • Benzene – Crude Oilலிருந்து தயாரிக்கப்படும் industrial solvent.
  • Cadmium – அனைத்து Batteryகளிலும் உபயோகப்படுத்தும் வேதிப் பொருள் – சிகரெட் புகையிலும் உள்ளது.
  • Formaldehyde – Paint செய்ய உபயோகப்படுத்தும் பொருள்.
  • Polonium 210 – இது ஒருRadio Active பொருள்.
  • Chromium – Paint செய்ய உபயோகப்படுத்தும் பொருள்.
  • 1,3 Butadiene – ரப்பர் செய்ய உபயோகப்படுத்தப்படும் பொருள்.
  • Poly cyclic aromatic hydrocarbons – ஒருசெல்லில்(cell)  உள்ள nucleusஐ (DNA) மாற்றி, புற்று நோய் உண்டு பண்ணக் கூடிய பொருள்.
  • Nitrosamins – DNAஐ மாற்றி அமைக்கக் கூடிய பொருள்.
  • Acrolern – முன்பு ‘chemical weapon’ ஆக உபயோகப்படுத்தப்பட்டது.

புகையில் உள்ள விஷப் பொருட்கள்:

  • சைனைட்டு(Cyanide) – உயிரைக் கொல்லும் விஷம்.
  • கார்பன் மோனாக்ஸைடு (Carbon Monoxide) வாகனங்களில் car உள்ள exhaustல் வெளியிடப்படும் புகை – நம் இரத்தத்தில் அதிக அளவில் கலந்தால் மரணத்தை ஏற்படுத்தும்.
  • நைட்ரஜன் ஆக்ஸைட் (Nitrogen Oxides) – smokeல் வெளிடப்படும்  ஒரு பொருள்.
  • அம்மோனியா (Ammonia) – உரம் செய்வதற்கும், வெடி மருந்து தயாரிப்பதற்கும் பயன்படுத்தும் ஒரு பொருள்.

இந்தப் பட்டியலைப் பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம், சில ஆயிரக்கணக்கான வேதிப் பொருட்கள் இந்த சிறிய சிகரெட் புகையில் காணப்படுகிறது.  இவைகள் சிறுக சிறுக உடலிலும் நுரையீரலிலும் சேர்ந்து அநேக நோய்களை நாளடைவில் உண்டு பண்ணுகின்றன. அவைகள் கணக்கில் அடங்காதவைகள். அவைகளில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்:

1.   புற்று நோய்  (Cancer) : நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பத்து நபர்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தைப் பற்றி நீங்கள் கேட்டால், ஒன்பது பேர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதாக சொல்லுவார்கள். இந்தப் புற்று நோய் மிகவும் வேகமாக ஒருவரைக் கொல்லக் கூடியதாக உள்ளது.

புகையினால் உடலின் மற்ற பாகங்களிலும் புற்று நோய் வர வாய்ப்புகள் இருக்கிறது:

    1. வாய்
    2. உணவுக்குழாய் (Pharynx)
    3. வோகல்கார்ட் (Larynx- vocal cord)
    4. கல்லீரல் (Liver)
    5. சர்விக்ஸ் (Cervix)
    6. சிறுநீரகம் (Kidney)
    7. சிறுநீர்ப்பை (Urinary Bladder)
    8. வயிறு (Stomach)
    9. கணையம் (Pancreas)
    10. இரத்தப்புற்றுநோய் (Blood Cancer)

உண்மை: புகைப் பழக்கமுள்ளவர்களில் பாதிப் பேர்கள் புற்று நோய்கள் மற்றும் புகையினால் வரக் கூடிய மற்ற நோய்களினால் மரித்துப் போவார்கள்.

2. நுரையீரல் நோய்கள்  (Lung diseases)

    1. பிரான்கைடிஸ் (Chronic Bronchitis)
    2. இம்பைஸீமா (Emphysema)
    3. நிம்மோனியா (Pneumonia)

கீழே உள்ள படத்தில், புகை பிடிப்பவரின் நுரையீரலும், புகைப் பழக்கம் இல்லாதவருடைய நுரையீரலும் எவ்வளவு வித்தியாசமாகக் காணப்படுகிறது என்பதைக் காணலாம்.

Lungs

3. மாரடைப்பு நோய்   (Heart Attack)

புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும், இருதயத்திற்கு சுத்த இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் (artery) கொழுப்புச் சத்தைச் சேமித்து, நாளடைவில் மாரடைப்பை உண்டு பண்ணுகிறது. கீழே உள்ள படத்தில் இதைக் காணலாம்.

artery

 

4. பக்க வாதம்   (Stroke)

இருதயத்தில் எப்படி கொழுப்புச் சத்து(fatty deposits) சேமித்து வைக்கப்படுகிறதோ அதே போல் மூளைக்கு சுத்த இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்களிலும் கொழுப்புச் சத்து சேர்ந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. கை கால் செயலிழந்து போய் விடுகிறது. இது தான் பக்க வாத நோய்.

5. கண் மற்றும் பல் பிரச்சனைகள் : (Cataract) கண்களை பாதிக்கும் கட்ரக்ட் மற்றும் பற்களை பாதிக்கும் Peri-odantitis

6. மற்றும் பலகாயங்கள் மெதுவாகத்ாதான்சுகமாகும், குழந்தையின்மை, வயிற்றுவலி etc.

புகைப்பதை நிறுத்தி என்ன பயன் ?

 VIDEOS

 

Reference :
1.   Cancer Research, UK.
2.   British Heart Foundation
3.   U.S. Department of Health and Human Services : Health Consequences of Smoking : A report of the Surgeon General, 2004.
smsimonkபுகை பிடித்தல் ( SMOKING )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *