புகையை நிறுத்திவிட்டால், மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் நம் உடல் மீண்டும் இயல்பான நிலைக்கு (Normal) படிப்படியாக வரத்துவங்கும். புகையை நிறுத்திய அடுத்த நிமிடங்கள் / மணிகள் / மாதங்கள் / வருடங்கள் என்ன பயன்பள் என்பதை சற்று பார்ப்போம்.

20 நிமிடங்கள் :- புகையை நிறுத்திய 20 நிமிடங்களில், உங்கள் BP (இரத்த அழுத்தம்) குறைய ஆரம்பிக்கிறது. இருதயத் துடிப்பு (Pulse rate) குறைந்து இயல்பான நிலைக்கு வருகிறது.

8 மணி நேரம் :- இரத்தத்தில் குறைந்து இருந்த ஆக்ஸிஜன் (Oxygen) அளவு மீண்டும் இயல்பான அளவிற்கு வருகிறது. முன்பு பார்த்த கார்பன் மோனாக்ஸைடு (Carbon Monoxide) இரத்தத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டு, உடலைவிட்டு வெளியேற்றப்படுகிறது.

48 மணி நேரம் :- சுவை உணர்வும், நுகர் உணர்வும், மேம்படுத்தப்படுகிறது. அழிந்து கொண்டிருந்த நரம்பின் நுனி மீண்டும் துளிர்விடுகிறது.

2 வாரம் முதல் 3 மாதங்கள் வரை :- நுரையீரல் நன்கு வேலை செய்கிறது. மற்றும் உடலின் இரத்த ஓட்டம் மீண்டும் நன்றாக தன் இயல்பு நிலைக்கு மாறுகிறது. அதனால் நீங்கள் நடக்கும்பொழுது ஒரு புது பெலன் இருப்பதை உணருவீர்கள்.

3 முதல் 9 மாதங்கள் வரை :- இருமல், சைனஸ் (Sinusitis) பிரச்சனைகள், பெலனற்ற நிலை, மூச்சு வாங்குதல் போன்றவைகள் மாறுகின்றன.

1 வருடம் :- புகைப் பழக்கத்தை நிறுத்தி 1 வருடம் சென்றபின், மாரடைப்பு ஏற்படும் அபாயம் பாதியாகக் குறைந்து விடும்.

5 வருடங்கள் :- பக்கவாதம் ஏற்படும் அபாயம் முழுவதாகக் குறைந்துவிடும்.

10 வருடங்கள் :- நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் பாதியாகக் குறைந்துவிடும்.

வாய், தொண்டை உணவுக்குழாய், சிறுநீர்ப் பை, சிறுநீரகம், கணையம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய புற்றுநோயின் அபாயம் குறைந்துவிடும்.வயிற்றுப் புண் மறைந்துவிடும்.

smsimonkபுகைப்பதை நிறுத்தி என்ன பயன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *