மனிதன் மன அமைதிக்காக தேடி அலைகிறான். அவனது தேடல் மிகவும் நீண்டது. தன்னைச் சுற்றி தொடங்கும் இந்த தேடல் உலகத்தின் மறு முனை மட்டும், வானத்தின் எல்லை மட்டும் செல்கிறது. மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமை ஆகிறான். நண்பர்களுடன் உலகை சுற்றி வருகிறான். புகழை சம்பாதிக்கிறான். பொருளை ஈட்டுகிறான். எதிலும் அவன் தேடும் ஆழ்ந்த மன நிம்மதி கிடைக்கவில்லை. அது எங்கே?  …………………………………………………?!

hands

அவனுக்குள் அது மறைந்து இருக்கிறது……………………….. அதை அறிந்த அன்று, அவன் மனதில் ஒரு ஒளி கீற்று தோன்றும். தனக்குள் தூன்று கிடக்கும் ஊற்றை / துறவை, மண் நீக்கி, ஆழமாக திரும்ப தோண்டினால் சுய அறிவு பிறக்கும். தான் பிறப்பிலேயே பாவக்கறை உள்ளவன் என்பதையும், தன் மரபணுக்களோடு பாவம் ஒட்டி இருக்கிறது என்பதயும் புரியும் – இந்த சுய அறிவே – உண்மையான விடுதலை அடைய எந்த விலையும் கொடுக்கலாம் என்ற உணர்வை உருவாக்கும். தனக்கும் இறைவனுக்கும் இடையிலான நீண்ட இடைவெளி, தன் பாவதினலேயே ஏற்பட்டது என்பதை உணர்ந்த பின்பு, பாவத்தை போக்கும் பலியை தன்னால் செலுத்த முடியாது என்ற உதவியற்ற நிலையையும் புரிந்து கொள்ளுவான். இன்னும் தோண்டினால் சுய அறிவு இன்னும் பெருகும் என்பதையும் உணருவான்.

பாவபலியாக இயேசு உவுலகில் அவதரித்தார். அவரால் இல்லாமல் ஒருவனும் பரலோகத்திற்கு வரான் என்பதை நம்புவான். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று அவரைத்தவிர இந்த உலகில் எந்த மகானும் சொல்லவில்லை என்பது அவனுக்கு புரியும். அவர் தரும் நுகத்தை  ஏற்றுக்கொண்டால், தன் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்பது வெட்ட வெளிச்சமாகும். ஏனென்றால் அவர் தரும் நுகம் மெதுவாயும், அவர் என் வாழ்வில் கொடுக்கும் சுமை இலகுவாயும் இருக்கிறது என்பதை உணருவான். இயேசு கிறிஸ்து தேவனால் அனுப்பப்பட்டவர். மரியாள் என்னும் கன்னியிடத்தில் பரிசுத்த ஆவியால் பிறந்தார். யோசப்பு என்பவர் அவருடைய மாம்சீக தகப்பன் அல்ல. அவர் தனது இரத்தத்தை சிலுவையில் பலியாக செலுத்தி, மனுஷனுடைய பாவத்தையும், சாபத்தையும் நீக்கவே வந்தார். அவர் மனிதனாகப் பிறந்த அவதரமல்ல. அவர் தூய திருக்கடவுளின் ஒரு வெளிப்பாடு. அவராலே அன்றி பவ மன்னிப்பு இல்லை. உள்ளத்தில் இந்த அறிவு பெருக பெருக, நம் ஆழ் மனதில் திறந்து கொண்ட துறவு, வற்றாத ஜீவ நதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. என் பாவத்தை நான் உணர்ந்து அதை கடவுளிடம் சொல்லி, அறிக்கையிடும் போது, என் ஆள் மனதில் ஒரு ஆழ்ந்த சமாதனம் ஏற்படுகிறது.

peace_lowres

நான் ஒரு புது மனிதனாகிறேன். இனி நான் தனித்து வாழ முடியாது. கடவுளிடம் இருந்து புறப்படும் பரிசுத்த ஆவியை என் துணையாக நான் ஏற்றுக்கொள்கிரறேன். இப்போது நான் தனியன் அல்ல. கடவுளுடைய பிள்ளையாக நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன். என் மரணத்திற்குப் பின், நான் நித்திய வாழ்வு வாழுவேன் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. துய ஆவியினால் என் வாழ்வு முத்திரையிடப்படுகிறது. என் வாழ்வு மலருகிறது. என் கண்ணோட்டம் மாறுகிறது. வாழ்வின் குறிக்கோள்கள் மாறுகிறது. உலக இன்பம் குப்பையாகத் தெரிகிறது. என் ஆழ் மனதில் ஓடுகின்ற ஜீவ நதி, என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் நனைக்கிறது. என் கனவுகள், எதிர்பார்ப்பு, எனது சிந்தனைகள், உணர்வுகள் – இவை அனைத்திற்கும் மையத்தில் இயேசு கிறிஸ்துவை நான் வைத்துள்ளேன். இனி என் விருப்பமல்ல, அவர் விருப்பமே, என் வாழ்வின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் விளங்கும். வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையும், எனக்கு சமதானமும், ஆறுதலும் தருகிறது. அதன் ஒவ்வொரு பகுதியை நான் வாசிக்கும் போது என் சிந்தையில் தெளிவு பிறக்கிறது. இரவும் பகலும் நான் ஜெபிக்கும்போது, என் பிரார்த்தனைகள் கேட்கப்படுகிறது. கடவுளோடு சேர்ந்த எனது வாழ்வு, பிறரை வாழ வைக்கிறது. என் வாழ்கை இன்னும் சற்று கடினம் தான். ஆயினும் இந்த கஷ்டத்தின் மத்தியிலும், எனக்கு ஒரு நல் நம்பிக்கையும், நான் வாழ்வில் சரியாகத்தான் நடக்கிறேன் என்கிற உணர்வை, நித்தமும் என்னை நடத்தும் கடவுள் நிச்சயமாக கொடுத்து இருக்கிறார். இந்த உலகில் அழுத்தங்களும், பிரச்சனைகளும், போராட்டங்களும் வரலாம். ஆனாலும் கடவுளின் துணையால் பெரிய விடுதலை ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குக் கிடைக்கிறது. இப்பொழுது நான் இயேசுவிடம் கிடைத்த இந்த சமாதானத்தை/ சந்தோஷத்தை பிறருக்கும் காட்ட விரும்புகிறேன். அவர் தரும் ஈடு இணையற்ற நிம்மதியை பகிர்ந்து கொள்ளுகிறேன். குடி போதை, மன மயக்கம், கவலைகள், பயங்கள், குழப்பங்கள், கோபங்கள், பொறாமைகள், சண்டைகள் – போன்றவற்றில் அமிழ்ந்து கிடக்கும் மனிதர்களுக்கு வழிகாட்டும் ஒளி என்னிடம் உள்ளது. இதுவே மனம் திரும்பிய ஒவ்வொரு பக்தனின் கதை ஆகும்.

jeshoorநிம்மதி எங்கே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *