குடிப் பழக்கத்திற்கு அடிமையான மக்களை கீழே கொடுக்கப்பட்ட வகையாகப் பிரிக்கலாம்.

கட்டம் 1 : மறுப்பு (Denial) – “எனக்கு குடி ஒரு பிரச்சனையே இல்லை”, “அதைப் பற்றி யாரும் பேசவேண்டாம்”.

கட்டம் 2 : Pre-contemplation -குடியை என்னால் ஒரே நாளில் நிறுத்த முடியும். யாருடைய உதவியும் வேண்டாம்.

கட்டம் 3 : மன போராட்டம் (Contemplation) – குடிப்பவரின் மனதில் ஒரு போராட்டம். குடியை விடலாமா ? தொடரலாமா ? குடியை விட்டால் நன்மை கிடைக்குமோ ? என்னால் குடியை விட முடியுமோ ?

கட்டம் 4 : சுய முயற்சி (Action) – குடியை விடுவதற்காக தானே முயற்சி எடுக்கிறார். குடியை மருத்துவ உதவி இல்லாமலேயே நிறுத்தி,(Withdrawal Syndrome)உடல் சுகவீனத்தால் கஷ்டப்படுகிறார். மீண்டும் குடியை ஆரம்பிக்கிறார். எப்படி குடியை விடுவது என தெரியாமல் சோர்ந்து போகிறார்.

கட்டம் 5 : உதவி தேடுதல் (Seeking help) – குடியை நிறுத்துவதற்காகப் பல முயற்சிகள் எடுக்கிறார். மருத்துவர் உதவியுடன் மதுவை நிறுத்துகிறார் (De-addiction). தான் குடிக்கு அடிமையாகி இருக்கிறோம் என்றும் இதிலிருந்து நான் விடு பட வேண்டும் என்றும் மனதில் தெளிவு பிறக்கிறது.

கட்டம் 6 : மது விலக்கு (Sobriety/ abstinence) -முழுமையாக குடியை நிறுத்தி விட்டார்; ஆனாலும் சில நாட்களில் குடிக்கும் நண்பர்களைப் பார்க்கும் போது (People)அல்லது தான் முன்பு குடித்த இடங்களை பார்க்கும் போது (places) அல்லது குடிக்கும் போது நடந்த சம்பவங்களை நினைக்கும் போது (Thoughts) மீண்டும் குடிக்க வேண்டும் என திடீரென அடக்க முடியாத தாக்கம் (Craving) ஏற்படுகிறது. இப்படிப்பட்ட போராட்டத்துடன் குடி இல்லாத புதிய வாழ்க்கைக்குள் நுழைகிறார்.

முதலாவது, குடிக்கு அடிமையான நபர் இந்த 6 கட்டங்களில் எங்கு இருக்கிறார் என்பது ஒரு மனநல மருத்துவரின் பரிசோதனையின் பின் (Assessment) தெரிய வரும். கட்டம் 1 & கட்டம் 2ல் உள்ள நபரை கட்டம் 3க்கு மருத்துவ ஆலோசனை மூலமாகவும், இரத்த பரிசோதனை மூலமாகவும் பயிற்சி பெற்ற மனநல மருத்துவரின் விசேஷித்த உரையாடல்கள் (Motivational Interviewing) மூலமாகவும் கொண்டு வர முடியும். இதற்கு அவருடைய குடும்பமும் குறிப்பாக துணைவியார்களும் ஒத்துழைக்கும் போது படிப்படியாக அந்த நபரை மீட்டு எடுக்கலாம்.

தினம் குடித்துக் கொண்டு இருக்கும் ஒரு நபரின் மூளையில் ஒரு மாறுதல் ஏற்படுகிறது (Neuro adaptation). மிகவும் வியக்கத்தக்கதாக கடவுள் படைத்த இந்த மனிதனின் மூளை Alcohol தினசரி இரத்தத்தில் கலந்த மூளைக்கு வருவதால் அதிலுள்ள வேதிப்பொருள்கள் (chemicals)ல்  ஒரு விசேஷ மாற்றம் ஏற்படுகிறது. இதை எளிதாகப் புரிந்து கொள்ள இந்த உவமானத்தை கூறுகிறேன். ஒரு மனிதன் தன் காரை சுமார் 80 Km வேகத்தில் ஓட்டிக் கொண்டு செல்கிறார். மேலை நாடுகளிலே Seat Belt போட்டுக் கொண்டு காரை ஓட்டுவது அவசியம். தினம் Alcohol குடிக்கும் நபரை இந்த காரை (carரை) ஓட்டிக்கொண்டு செல்லும் நபருக்கு ஒப்பிடுவோம். இப்பொழுது திடீரென ஒரு மாடு குறுக்கே வர, அந்த கார் உடனடி நிறுத்தம் (car sudden break)  போட வேண்டியது ஆயிற்று. அப்பொழுது என்ன நடக்கும்? அந்த நபர் மிகவும் வேகமாக முன்னால் தள்ளப்படுவார். Seat belt அவரைப் பிடித்து பின்னாலே இழுக்கும். இதே போலத்தான், தினமும் குடிப்பவர் திடீரென்று ஒரு நாள் குடியை நிறுத்தும்போது, அதிகமான வேதிப்பொருள்கள் (chemicals, harmones) சுரப்பதால் உடலில் ஒரு பெரிய மாறுதல், போராட்டம் நடைபெறுகிறது. இதனைத்தான் withdrawal syndrome என்று கூறுகிறார்கள். இதன் அறிகுறிகளாவன :

 • நெஞ்சு படபடத்தல்
 • வியர்வை
 • பயம், பதட்டம்
 • உடல் / கை, கால் நடுக்கம்
 • இரத்த அழுத்தம் (BP) கூடுதல்
 • தலை சுற்றல்
 • வாந்தி எடுத்தல்
 • மற்றும் சிலருக்கு 3 – 5 நாட்களுக்குள் வலிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. (இந்த வலிப்பு – Alcohol Withdrawal Syndromeத்தினால் ஏற்படக்கூடியது. இதற்கும் வலிப்பு நோய்க்கும் Fitsக்கும் (Epilepsy) சம்பந்தம் இல்லை.

இந்த காரணங்களுக்காகத்தான், மருத்துவ உதவி இல்லாமல் குடிக்கு அடிமையான ஒரு நபர் குடியை திடீரென நிறுத்தக்கூடாது.

நிச்சயமாக. எந்த ஒரு நபரையும் குடியிலிருந்து 100% பரிபூரணமாக விடுவிக்க முடியும். அந்த நபர் குடியினால் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார், எவ்வளவு காலத்திற்கு அடிமை ஆகி இருக்கிறார் என்பதனை அறிந்து, அவருக்கு ஏற்ற முறையில் மருத்துவம் செய்யும்பொழுது அவர் படிப்படியாக மாறி நாளடைவில் குடியை முழுவதும் விட்டுவிட முடியும்.

கீழே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன :

 • Comprehensive Assessment
 • Physical Examination
 • Blood tests, Scan
 • Motivational Interviewing
 • Personal work-book & Individual Care Plan
 • Psycho-Education
 • Diary Keeping
 • Planned detox
 • Cognitive Behaviour Therapy
 • Family Counselling
 • Group Therapy
 • Relapse Prevention Sessions
 • AA Meetings
 • Al-Non Meetings (குடும்பத்தினருக்கு)
 • Annual Abstinence Celebrations
 • Alcohol blocker therapy
 • மற்றும் பல.

     a) Finance : உதாரணம்

      1 நாள் Alcoholic Drinks வாங்கும் செலவு= ரூ.400

      30 நாள் செலவு                                                = ரூ.12,000

      ஒரு வருடத்தில் செலவு                            =  ரூ.1,44,000

ஒரு நாள் ரூ. 400 செலவழித்தால், ஒரு வருடத்திற்கு ரூ. 1,44,000 செலவாகிறது. இந்த செலவில் ஒரு சிறிய பகுதியை மருத்துவத்திற்கு செலவழித்தால் கிடைப்பது கோடி நன்மைகள்.

b) Health : உதாரணம். குடிப்பதால் கல்லீரல் மூன்று விதமாகப் பாதிக்கப்படும்:

Stage 1 : Fatty liver : கொழுப்பு உள்ள கல்லீரல்.

Stage 2 : Alcoholic Hepatitis : மஞ்சள்காமாலை நோய்

stage 3 : Cirrhosis : கல்லான கல்லீரல்

Stage 1 & 2ல் இருக்கும் நபர் குடியை நிறுத்தும் போது, கல்லீரல் படிப்படியாக குணமடைந்து இயல்பான நிலைக்கு (Normal Liver) சில வாரங்களில் வந்துவிடும்! குடியை முழுவதும் நிறுத்தி சுமார் 3 மாதங்கள் கழித்து blood test செய்து பார்த்தால் கல்லீரல் சுகமாக மாற ஆரம்பித்ததைப் பார்த்து அந்த நபர் எல்லையில்லா மகிழ்ச்சிக்குள்ளாவார்.

c) Relationship : குடும்பத்தின் உறவு

குடியை விட்ட மனிதர், தன் சுய நினைவுக்குத் திரும்புவான். தன் நிலையை உணர்ந்து மீண்டும் வேலைக்குச் செல்லுவான். வாழ்க்கை கடினமாக இருந்தாலும், தன் கடனை எல்லாம் திரும்பி அடைப்பான். குடும்பத்தின் பொறுப்பை மீண்டும் எடுப்பான். குடும்பத்தின் உறவு பிரச்சனைகள் மாறி மீண்டும் குதூகலம் உண்டாகும்.

smsimonkகேள்விகள் ( FAQ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *