குடிப்பது தவறா? 

ஜுனியர் விகடன் பத்திதிரிகையில் ‘மயக்கம் என்ன’ என்ற தலைப்பில் டி. எல். சஞ்சீவி குமார் எழுதிய கட்டுரைகளை வாசித்திருப்பீர்கள். பல தகவல்களை இணைத்து மிகவும் அருமையாக எழுதியுள்ளார்.

Pavilion-22

ICC Cricket Championship Trophyயின் இந்தியா Vs இங்கிலாந்து கிரிகெட் போட்டியை இங்கிலாந்தில் உள்ள கார்டிப்-இல் (Cardiff, United Kingdom) நேரடியாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது நண்பர் ஒருவர் இந்தியாவிலே TVல் Live ஆக இதே போட்டியை பார்த்துக் கொண்டு இருந்தார். நான் அவருடன் தொலைபேசியில் பேசிக் கொள்ளும் போது, அவர் என்னிடம் கேட்டார், “இந்தமைதானதில் (cricket ground) உள்ள பெரும்பாலான மக்களின் கைகளில் ஒரு பெரிய கோப்பை (பீர்) இருக்கிறதே. அதுஎன்ன?” என்று. நான்அவரிடம் “மேலைநாட்டவரின் இனிய பொழுதுபோக்கு, மைதானதில் வந்து நேரடியாக விளையாட்டுப் போட்டிகளை (Cricket, Football, Rugby) பார்ப்பது. அதோடு கூட பீர் குடித்துக் கொண்டே போட்டியை பார்ப்பது இயல்பான காரியமாகும்” என்று கூறினேன். இங்கு வசிக்கும் சில இந்தியர்கள், தமாஷாக “பிரிக்கமுடியாதது? – பீர்ரையும் பூட்பாலையும்” என்று கூறுவார்கள்.

இப்படி மேலை நாடுகளிலே, பீர், பிராண்டி போன்றவைகளை மிகவும் சாதாரணமாக உபயோகப்படுத்துகிறார்கள். இப்பொழுது மேற்கத்திய நாடுகளின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக நகரப் (Chennai, Bangalore, Mumbai, Delhi) பகுதிகளில் பார் வசதியுடன் நவீன ஹோட்டல்களில் எளிதாக வழங்கப்படுகிறது. பெண்களும் சாதாரணமாகக் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழ்நாட்டில் டாஸ்மாக்  என்ற அரசு நிறுவனம் மூலமாக, தண்ணீரைப் போல் மது விநியோகிக்கப்பட்டு அரசுக்கு அதிக இலாபத்தை ஈட்டிக் கொண்டு வருகிறது. கடந்த வருடம் மட்டுமே சுமார் பதினெட்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருமானம் வந்துள்ளது !

குடிப்பது தவறா? அல்லது, நான் குடியினால் பதிக்கபபட்டிருக்கிறேனா? – என்ற  கேள்வியை நாம் சிந்திப்போம்.

என்னிடம் வருகின்ற அநேக மக்கள் என்னிடம் சொல்லுவது இது தான் : “நான் குடிகாரன் அல்ல. எப்போதாவது பண்டிகை நாட்களின் போது மட்டும் நான் குடிப்பது வழக்கம். நான் social drinker தான். இது தவறா?” என்று கேட்பது உண்டு. உண்மை தானே! மாதம் ஒரு முறை அல்லது இரு முறை குடிப்பதில் தவறு ஏதேனும் உண்டோ?

நீங்கள் குடிப்பதினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள காரியங்களில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை யென்றால், நீங்கள் குடிப்பது, சரி என நீங்களே சொல்லலாம்:

 1. பாதுகாப்பாக கார் அல்லது பைக் ஓட்டுதல். ஆக்ஸிடென்ட் ஆகாமல் இருத்தல்.
 2. மறதி இல்லாமல் இருத்தல்.
 3. சரியான நேரத்திற்கு வேலைக்குச் செல்லுதல்.
 4. அடிக்கடி கோபம் இல்லை.
 5. வேலை இடத்தில் பிரச்னை இல்லை.
 6. கடன் வாங்காமல் இருத்தல்.
 7. மனம் சோர்வடையாமல் இருத்தல்.
 8. குடும்பத்தில் உறவுப் பிரச்னைச் சண்டை இல்லை.
 9. சமுதாயத்திலும் பிரச்னை இல்லை.
 10. உங்கள் உடலில் வயிறு, கல்லீரல், கணையம், இரத்த அணுக்கள், சிறுநீரகம், மூளை  போன்ற அவயவங்கள் குடியினால் பாதிப்பு அடையாமல் இருத்தல்.
 11. குடித்த பின், அடுத்தநாள்: தலைவலி, தலைசுற்றல், வாந்தி எடுத்தல், தூங்குதல் போன்றவைகள் இல்லமல் இருத்தல்.
 12. நீங்கள் குடிப்பதை மற்றவர்கள் கண்டித்துணர்த்தல்.
 13. மற்றவர்களுக்கு தெரியாமல் ஒளித்து வைத்து குடித்தல்.
 14. காலையில் எழுந்த உடன் குடிக்க செல்லுதல்.
 15. பிரச்சனையை சமாளிக்கக் குடிப்பது.

இது போன்ற பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் குடி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த குடி அரக்கனிடமிருந்து உங்களால் மீளவே  முடியாது. நாட்கள் செல்ல செல்ல குடிப்பழக்கம் மிகவும் மோசமாகும். இதிலிருந்து முற்றிலும் விடுபட, மருத்துவ உதவியும் ஆலோசனையும் தேவை.

வேறு சிலர், இது போன்ற பிரச்சனைகள் எதுவும் எனக்கு இல்லை. எங்களால் இந்த குடியை எந்த நேரத்திலும் விட முடியும். இது மிகவும் இலேசான காரியம் என்று நீங்கள் சொன்னதுண்டோ? உங்களுக்கு ஒரு சவால்! இந்த குடியை ஒரு மாதம் தள்ளி வைத்து பாருங்கள். உங்களால் இது முடியுமா என்று உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள்.

Alcohol_Anonymous

இன்று AA (Alcohol Anonymous) கூட்டத்தில் கலந்து கொண்டீர்களா?

smsimonkALCOHOL – Part -1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *