குடிக்கு அடிமையா நீங்கள்? 

no alcohol chain

இப்பொழுது குடி அல்லது புகை பிடித்தல் அல்லது போதைப் பொருட்கள் அல்லது சூதாட்டம் போன்ற எந்த பழக்கமானாலும், அதற்கு அடிமையானவர்கள், கீழே காணப்படும் பட்டியலை உறுதி செய்வார்கள்:

1.   குடியின் மீது மித மிஞ்சிய ஆசை; அல்லதுகுடியேஅவரைஇழுத்து வைத்துக்குடிக்கவைக்கும். மேலும்ஒருஅதிகமானகட்டாயப்படுத்தும் ஒருஉணர்வு / நினைவு.

2.   குடியை, ஆரம்பித்தவுடன், அதன்அளவைக் கட்டுப்படுத்த முடியாது. கணக்கில் அடங்காத மட்டும் குடிப்பது.

3.   கிட்டத்தட்ட தினமும் குடிப்பது; குடியை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நிறுத்தி விட்டால், உடனடியாக ஒரு பதட்ட நிலை ஏற்படும்(withdrawal syndrome) – நெஞ்சில் படபடப்பு, வியர்வை, நடுக்கம், தலைவலி, வாந்தி எடுத்தல், முதலியன. ஆனால், மீண்டும் குடிக்க ஆரம்பித்த உடன், இந்த நிலைமாறி இயல்பான நிலை வந்து விடும். (அதாவது, படபடப்பு, வியர்வை அனைத்தும் நின்று விடும்).

4.   போதை ஏற அதிக அளவு குடி (Tolerance) - நாட்கள் செல்ல செல்ல குடியின் அளவுஅதிகரித்துக் கொண்டே செல்லும். ஏனென்றால், ஆரம்ப நாட்களில் சில கோப்பைகள் குடித்த உடனே போதையில் மிதந்தவர், பல நாட்கள் சென்ற பின், அதே சில கோப்பைகளில் போதை ஏறுவதே இல்லை. ஆதலால் போதை ஏறுவதற்கு அதிகம் குடிக்க வேண்டும்.

5.  முதன்மை (Priority) – Alcohol குடிப்பதே வாழ்க்கையின் ஒரே லட்சியமாக மாறி விடும். அதை எப்படி வாங்குவது, எங்கு சென்று குடிப்பது என பல திட்டங்கள் போட்டு குடிப்பதே ஒரு தொழிலாக மாறிவிடும். ஆதலால் அவர்கள் வாழ்க்கையின் மற்ற சந்தோஷம் தரும் காரியங்கள் (குழந்தைகளுடன் விளையாடுதல், சுற்றுலா செல்லுதல், பண்டிகை) அவர்களுக்கு சந்தோஷமாகத் தெரியாது. அதனால் உறவுப் பிரச்சனைகள் ஏற்படும்.

6.  கெடுதி வந்தாலும் குடி (Persistence, in spite of Harm)ஒரு மனிதர் குடிப்பதினால் பல கோணங்களில் கெடுதி ஏற்படும். அவரது உடலும் (ஈரல், கணையம், சிறுநீரகம், இரத்த அணுக்கள் போன்ற பிரச்சனைகள்) மனதும் (மனக் கவலை நோய்) பாதிக்கப்படும்; குடும்பத்தில் அநேக பிரச்சனைகள் (பணக் கஷ்டம், உறவு பாதிக்கப்படுதல், பிள்ளைகளின் கண்ணீர்) ஏற்படும்; சமுதாயத்தில் அவருக்கு மதிப்பு இல்லாமல் போகும்; குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், சாலை விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் அதிகமாகும்; குடியினால் போலீசிடம் மாட்டி வரும் பிரச்சனைகள் (consequences of breaking the law) – இப்படி பல பிரச்சனைகளுக்கு மூலக்காரணம் (Alcohol) குடி தான் எனத் தெரிந்தாலும், குடியை விடாமல் இருப்பது அடிமைத்தனத்தைக் காட்டுகிறது.

செரினிட்டிபிரேயர் (1942)

என் இறைவா! என் வாழ்வில் உள்ள சில காரியங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அவைகளை மாற்ற விரும்புகிறேன். என் இறைவா! என்னால் மாற்ற முடியாத அந்தக் காரியங்களை மாற்ற உம்முடைய பெலத்தை எனக்குத் தாரும்; உம்முடைய உதவியினாலும், உம்முடைய ஆவியினாலும் மட்டுமே விடுதலையுண்டு. இதனை நான் அறிந்து கொள்ளும் மனக் கண்களைத் தாரும் இறைவா !

உம் பெலத்தோடு ஒவ்வொரு நாளும் வெற்றியுடன் அடி எடுத்து வைக்கவும்; ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சந்தோஷமாக இருக்கவும்; என் வாழ்வின் பிரச்சனைகளின் மூலம் வெற்றி இலக்கை அடையவும், கொடிய இவ்வுலகில், பற் பல பாடுகளை, இயேசுவே, நீர் ஏற்றுக் கொண்டது போல, நானும் ஏற்றுக் கொள்ளவும் பெலன் தாரும்.

என் இறைவா! உம்மை நம்பும் என் நம்பிக்கை பெருகவும், என் சுயத்தை உமக்குச் சொந்தமாக்கினால், நீர் உடைந்த என் வாழ்வையும் நொறுங்கிய என் இருதயத்தையும் கட்டுவீர் என்பதனையும் நான் அறிந்துள்ளேன். ஆதலால் இவ்வாழ்வின் பிரச்சனைகளின் மத்தியிலும், மன திருப்தியையும், சந்தோஷத்தையும், உம்மோடு நான் கொண்ட உறவினால் வரும் பேரின்பத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.

praying-sunrise-web

Full version of the original Serenity Prayer (ca. 1942)

God, give us grace to accept with serenity the things that cannot be changed,

Courage to change the things which should be changed,

and the wisdom to distinguish the one from the other.

Living one day at a time, Enjoying one moment at a time,

Accepting hardship as a pathway to peace,

Taking, as Jesus did,

This sinful world as it is,

Not as I would have it,

Trusting that You will make all things right,

If I surrender to Your will,

So that I may be reasonably happy in this life,

And supremely happy with You forever in the next.

Reference: Wiki quote, available from: http://en.wikiquote.org/wiki/Reinhold_Niebuhr#The_Serenity_Prayer_.28c._1942.29

 

smsimonkALCOHOL – Part 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *