யாருக்கு / எப்போது / எப்படி – இந்த குடிப்பழக்கம் ஒரு அடிமைத்தனத்தைக்கொண்டுவருகிறது என்பதை இங்கு பார்ப்போம்:

  • யாருக்கு : நமது சமுதாயத்தில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகமாகக் குடியினால் பாதிக்கப்படுகிறார்கள்.  மேலும், சுமார் 15 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் alcohol உபயோகப்படுத்துகிறார்கள்.
  • Interestingly, ஆசிய நாடுகளில் வாழுகிற மக்களில் சில பேருக்கு Aldehyde dehydrogenase என்கிற என்ஸைம் (enzyme) வேறுபட்டு இருப்பதால், அவர்கள் சிறு அளவில் குடித்தவுடன், தலைசுற்றல், வாந்தி, படபடப்பு போன்றவைகள் நடக்கும். இது எதனால் ஏற்படுகிறதென்றால், இந்த என்ஸைம் (Aldehyde dehydrogenase) என்னும் நச்சுப் பொருள் உடலில் சேர்த்த உடன், உடல் நிலை மோசமாகிவிடுகிறது. இந்த சம்பவம் ஒரு நபருக்கு ஏற்பட்டால், அவர் அடுத்த முறை (Alcohol) குடியைக் கண்டவுடன் ஓட்டம் பிடிப்பார். இப்படிப்பட்டவர்கள் குடிக்கு அடிமை ஆகமாட்டார்கள்.
  • பெண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகும் போது, ஆண்களைக் காட்டிலும் மிகவும் அதிகமான உடல் பாதிப்பு ஏற்படும். அவர்கள் சில நாட்கள் சிறிது அளவே குடித்தால் கூட, மருத்துவரீதியான பிரச்னைகள் ஏற்படும். விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது என்னவென்றால், குடிக்கும் பெண்களுக்கு மார்பு புற்றுநோய், குழந்தையின்மை, menstrual irregularities, early menopause போன்றவைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

fetal baby

  • கருவிலிருக்கும் Foetus – கர்ப்பிணிப் பெண்கள் குடிக்கும் பொழுது கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏற்படும் தாக்கங்களைச் சற்று பார்ப்போம். 1968ல், பிரான்ஸ் தேசத்திலிருந்த, Lemonine என்பவர் இந்தக் குழந்தைகள் பிறக்கும் போது எப்படி இருப்பார்கள் என்பதை உலகுக்குத் தெரிவித்தார். இதைத் தான் foetal alchohol syndrome என்று சொல்வார்கள். இந்த குழந்தைகள் அதிக உயரம் வளர மாட்டார்கள். அவர்களது மூளை வளர்ச்சியும் குன்றி விடும். அதிக ‘துருதுரு’ வென்று இருப்பார்கள் ‘Hyperactivity’, முகம் வித்தியாசமாக இருக்கும் (Facial abnormality). அதனால் தான் விஞ்ஞானிகள், கர்ப்பிணிப் பெண்கள் சிறிதளவு கூட alcohol குடிக்கக்கூடாது என வலியுறுத்திச் சொல்லி வருகின்றனர்.
  • எப்போது :  எந்த ஒரு மனிதனும் ஒரே நாளில் குடியின் அடிமைத்தனத்திற்கு ஆளாகிவிடமுடியாது. ஆரம்பித்த ஒவ்வொரு வரும் Social Drinker ஆகத் தான் சில காலம் இருப்பார்கள். காலம் செல்லச் செல்ல அது ஒரு பொழுது போக்காக அமையலாம். (Recreational Use) அல்லது ஒரு பிரச்னை வரும் பொழுது சமாளிக்க முடியாமல் திணரும் போது குடிப்பழக்கத்திற்கு (coping mechanism) அடிமை ஆகலாம். பணப் பிரச்னைகள், உறவுப் பிரச்னை, வேலை இழந்து போவது போன்ற பல காரியங்கள் ஒருவருடைய வாழ்வில் நடக்கும் போது அவர் குடி தனக்கு நிம்மதியைத் தரும் என்று அதை நாடிச் செல்லலாம்.
  • எப்படி :   குடிக்கு அடிமையான ஒரு மனிதன் தான் இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் இருக்கிறோம் என்பதை உணரவே மாட்டார்கள். ‘எனக்கு குடி ஒரு பிரச்னை இல்லை’ என்றும் ‘என்னால் குடியை நிறுத்த முடியும்’ என்றும் ஆணித்தரமாகப் பேசுவார்கள். They are in total denial and completely blind to their problems. ஆனால் அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கும் (குடிக்காத) நண்பர்களுக்கும் அது நன்றாக புரியும். மேலும் நாம் குடியினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சீரழிவைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். வேலைக்குச் செல்லாமல் இருப்பதால் கடன்தொல்லை, பிள்ளைகளைக் கவனியாததால் அவர்களால் வரும் பிரச்னை, குடிப்பதால் குடிப்பவருக்கு வரும் உடல் சம்பந்தமான பிரச்னை, துணைவியாருக்கு மனக்கவலை போன்று பல கோணங்களில் பிரச்சனைகள் வரலாம்.

நெருங்கிய உறவினர்கள் இந்த நபருக்கு உதவிசெய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அந்த நபர் தனக்கு உதவி செய்ய நினைப்பவர்களைக் கேலி செய்து தனக்கு மருத்துவ உதவியோ ஆலோசனையோ தேவையில்லை என்று கூறிவிடுவார். இந்த பிரச்னை (‘Patient’s denial and refusing treatment’) பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல, உலகிலுள்ள மாடமாளிகைகளிலும் உண்டு. உலகப் புகழ்பெற்ற பாடகர் மற்றும் நடன வல்லுனர் மைக்கேல் ஜாக்சன் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருந்தார். அவர் ‘Never-Land’ எனச் சொல்லப்படுகிற மிகப் பெரிய மாளிகையில்வசித்துவந்தார். அவர் அடிமைத்தனத்தில் இருக்கிறார் எனக் கேள்விப்பட்டு அவருக்குஉதவிசெய்யச் சென்றஅவரது பெற்றோர்கள் அவருடைய மாளிகைக்கு வெளியே நிறுத்தப் பட்டுவிட்டனர். அவனுடைய சகோதரி, Janet Jackson அவனுடன் பலமணி நேரங்கள் பேசிப்பார்த்தும், உதவி செய்ய முடியவில்லை. கடைசியில் அந்தப் போதைப் பொருளால் அவர் தன்னை அறியாமலேயே (accidental Overdose) தன்னைக் கொன்றுவிட்டார்.

denial.009

ஆகையால் இந்த Denial – இந்த உணர்வற்ற நிலையை உறவினர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தத்தளிக்கும் உறவினர்கள் அநேகர் என்னிடம் கேட்பது இது தான் : இவர்அறியாமலேயே இவருக்கு மருந்து கொடுத்து இந்தக் குடியை மாற்ற முடியுமா? அவர்களுடைய ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எந்த ஒரு மனிதனுடைய மனதையும் ஒரு மருந்து மாற்றக் கூடுமோ? முதலாவதாக அந்த நபர் மருத்துவரைச் சந்திக்க சம்மதம் கூற வேண்டும். அப்பொழுது அவர் மனம் மாற வாய்ப்புகள் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டு பிடித்துவிடலாம். அதன் பின்னரே அவருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

குடிக்கும் ஒருவரை ‘மறுப்பு’ என்ற கட்டத்திலிருந்து மாற்றி, அவர் குடியை முழுவதும் விட்டு விட்டு, புது வாழ்வு வாழ விரும்புகிறாரா என்பதனை கண்டுபிடிக்கும் விதம் தான் “தீவிர ஊக்குவிக்கும் ஆலோசனை பயிற்ச்சி” (Motivational Interviewing Technique). இங்கிலாந்து தேசத்தில் இந்த பயிற்ச்சியை கற்றுத் தேர்ந்த என்னிடம் வருபவர்களை இந்த நபர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து தகுந்த ஆலோசனை வழங்குவேன்.   – Dr J J Kumar

smsimonkALCOHOL – Part 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *