gambling

‘சூதாட்டம்’ என்கிற வார்த்தையைக் கேட்டவுடன் அநேக மக்கள் என்னிடம் அந்தப் பழக்கம் இல்லை என்பார்கள். மாதம் ரூ.1க்கு லாட்டரி சீட்டு வாங்கி லட்சங்கள் கிடைக்குமா என எண்ணுகிற சிலரை எனக்குத் தெரியும். அதேபோல், கடன் வாங்கி வீட்டிலுள்ள சாமான்களையெல்லாம் விற்று, சூதாட்டம் ஆடிய சில நபர்களையும் நான் கண்டிருக்கிறேன்.

கிரிக்கெட் போட்டிகளில் நடக்கும் ‘Match Fixing’யும் ஒரு வகையான சூதாட்டம் தான். அன்மையில் நடந்த ஒரு பெரிய கிரிக்கெட் scandalலை நாம் அனைவரும் அறிவோம். இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் 2ம், 5ம் பந்து வீச்சை No Ball ஆக வீசினார். இப்படி அவர் No Ball வீசுவதற்காக பல லட்சங்கள் கை மாறியது.

குதிரை போட்டியில் எந்த குதிரை வெற்றிபெறும் என்பது நாளடைந்த ஒரு சூதாட்டமாகும்.

இப்பொழுது சூதாட்டம் எப்பொழுது அது ஒரு பிரச்சனையாக மாறுகிறது (Pathological Gambling) என பார்ப்போம்.

ஒரு தகப்பன் சூதாட்டத்தில் ஈடுபடும்பொழுது அதைப் பார்க்கும் சிறுவன் மனதில் அந்த தாக்கம் இருக்கும். மேலும் சிறுவயதில் விளையாட்டாக சிறிய தொகையை வைத்து சூதாடி, ஆச்சரியமாக வெற்றி பெற்றால் (Early Big Wins) அவன் தன்னை அதிர்ஷ்டசாலி என எண்ணி மீண்டும் மீண்டும் அதில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம். நாளடைவில் சூதாடும் பணமும், அதில் செலவழிக்கும் நேரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

கீழே உள்ள பட்டியலில் உங்களுக்கு ஏதேனும் உள்ளதா என சோதித்துப் பாருங்கள்:

  • மீண்டும் மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபடுவது.
  • சூதாட வேண்டும் என்கிற ஏக்கம் (craving) மனதில் அடிக்கடி ஏற்படுதல்.
  • எப்பொழுது, எங்கே சூதாடலாம் என்று மனதில் திட்டம் வகுத்தல்.
  • தனியாக இருக்கும்போது, சூதாடும் இடங்களும், அதனைப் பற்றிய நினைவுகள் மனதில் படம் போல ஓட ஆரம்பிக்கும்.
  • திடீரென புதிதாக பிரச்சனைகள் வரும்பொழுது (தொழில் / வீட்டில் / சமுதாய / பணப்பிரச்சனைகள்), சூதாட வேண்டும் என்கிற ஏக்கம் பன்மடங்கு அதிகரிக்கும்.
  • கட்டுப்படுத்த முடியாத கட்டுக்கடங்காத பலத்த நினைவுகள் மனதை தாக்குதல், தன்னை அறியாமலேயே சூதாடும் இடத்திற்குச் செல்லுதல். (Compulsive Gambling)
  • சூதாட்டத்தினால் தன் பணம், வேலை, மனைவி, பிள்ளைகள், வீடு, சொத்து, சுகம், போன்ற அனைத்தையும் இழந்துவிட்ட நிலையிலும் கூட, தொடர்ந்து சூதாடுவது.
  • சூதாடும் பழக்கத்தை ஆரம்ப நாட்களில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து விடலாம். ஆனால் விரைவில் பணம் அழிந்து போவதால், அவனது உற்றார் உறவினர் சந்தேகப்படலாம். எவ்வளவு சீக்கிரத்தில் இந்த நபருக்கு சிகிச்சை அளிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரத்தில் அநியாயமாக செலவழியும் பணம் உங்கள் கைகளில் தங்கும்!
smsimonkசூதாட்டம் ( GAMBLING )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *