OVERVIEW
2012ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி, உலக மக்கள் தொகை 7 பில்லியன்களைத் (700 கோடி /Crores) தாண்டியது. இன்றைய (01.08.2014) தினம், இந்த உலகத்தில் சுமார் 720 கோடி மக்கள் உள்ளனர். பெரும்பாலான மக்கள் (சுமார் 200 கோடி) சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தேடி அலைகின்றனர். பிரச்னைகளைச் சந்திக்க, சமாளிக்க முடியாமல் திணருகிறார்கள். இதிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ள ஒரு புகலிடத்தைத் தேடுகிறான். பல நூற்றாண்டுகளாகத் தேடியும் தனது மனக்காயங்களுக்குத் தைலத்தையும் உடைந்த உள்ளங்களுக்கு ஆறுதலிளிக்கும் மருந்தையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆகிலும், ஒரு சில வினாடிகளுக்குத் தன்னை மறக்க, சிற்றின்பத்தை அனுபவிக்க, பல்வேறு வகையான நிகழ்ச்சிகள், கருவிகள், காரியங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் ஒருவருடைய மூளையில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இது எவ்வாறு ஏற்படுகிறது என்பது எளிய முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மாணவன் தேர்வில் முதலாவதாக வந்து வெற்றி பெறும்போது அதிக சந்தோஷமாக உணருவான். ஓட்டப் பந்தயத்தில் ஓடும் ஒரு வீரன் முதலாவது வந்து வெல்லும் போது பெருமிதம் கொள்ளுவான். கிரிக்கெட் போட்டியில், விறுவிறுப்பு ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெறும்போது நாம் எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்குகிறோம். இரவெல்லாம் தூங்க முடியாமல் அந்த சந்தோஷத்தில் மிதக்கிறோம்.
அதே போல, இன்னும் சாதாரண காரியங்களை எடுத்தக் கொள்ளுவோம். திருநெல்வேலியில் புதிதாகத் திறந்த ஒரு உணவு விடுதிக்குச் சென்றேன். அந்த உணவு மிகவும் சுவையாக இருந்தது. இந்த ஊரில் இவ்வளவு சுவையான ஒரு உணவகமா என்று நாவிலே எச்சில் ஊறுகிற அளவு அந்த முதல் நாள் உணவு இருந்தது. அதனால் என் நண்பர்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு மீண்டும் ஒரு நாள் சென்றோம். என் நண்பர்கள் எல்லாரும் மிகுந்த பூரிப்புடன் ருசித்து உணவு உட்கொண்டார்கள். ஆனால் என்னால் முன்பு அனுபவித்த ருசியை அனுபவிக்க முடியவில்லை. நன்றாக சுவையுடன் இருந்தது. ஆனால் அது முதல் நாள் போல் இல்லை. இது ஏன் இப்படி இருக்கிறது என்று, மீண்டும் மீண்டும் சென்று அதே உணவு விடுதியில் உட்கொண்டேன். பெரும் ஏமாற்றம் மட்டுமே காத்திருந்தது. சமையல்காரர் மாறிவிட்டாரோ அல்லது உணவுப் பொருட்கள் மாறிவிட்டதோ என்ற என் சந்தேகத்தை விடுதி உரிமையாளரிடம் கேட்டேன். எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.
இதுபோல உங்களுக்கு நடந்ததை கவனித்ததுண்டோ? இதற்கு என்ன காரணம் என்றும், இதற்கும் Addictionனுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் காணுவோம்.
ஐம்புலன்களில் முக்கியமான ஒன்று நாவு (சுவை). மிகவும் சுவையான உணவை முதல்தரமாக உட்கொள்ளும்போது, இந்த சுவை உணர்வு நாவிலிருக்கும் நரம்புகள் மூலமாக மூளைக்கு தகவல் அறிவிக்கிறது. குறிப்பாக, மூளையிலிருக்கும் ஒரு ரசாயனச்சுரப்பிக்கு (Nucleus Accumbens) அந்தத் தகவல் செல்கிறது. உடனடியாக அந்தச் சுரப்பி ‘சந்தோஷத் திரவத்தை’ மூளையிலிருந்து சுரக்கிறது. இதில் முக்கியமான ஒன்றுதான் ’டோப்பமின்’ (Dopamine) என்று சொல்லப்படுகிற திரவம். இது சுரந்தவுடன், நாம் மிகவும் சந்தோஷமான ஒரு நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஆகையால் அந்த உணவு மிகவும சுவையாகத் தெரிகிறது. இது முதல் தடவை நடக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் மீண்டும் மீண்டும் அதே வகையான உணவுப் பொருளை அதே உணவு விடுதியில் உட்கொள்ளும்போது, சுரப்பிகளிலிருந்து வரும் இந்த திரவத்தின் அளவு (மூளையில்) குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் முதல் தடவை உண்டபோது உள்ள சுவை மறுபடியும் காணப்படவில்லை. அது ஒரு கானல் நீராக மாறிவிடுகிறது. உணவு விடுதியை மாற்றி புதிய ஒரு உணவகத்திற்குச் செல்லும்போது இதேபோல் நடக்கிறது.
மேற்கூறிய உதாரணங்களில் எல்லாம் (பரீட்சையில் / கிரிக்கெட் போட்டியில் வெற்றி / உணவு புதிய உணவு விடுதியில்) ‘டொப்பமின்’ என்டார்பின்ஸ் (Endorphins) ’அசெடைல் கொலின்’ (Acetylcholine) போன்ற இரசாயனப் பொருட்கள் இறைவன் படைப்பின்படியே இயல்பாக நமது மூளையில் சுரக்கின்றன. இது மிகவும் ஒரு நல்ல காரியமாகவும், இப்படிப்பட்ட இரசாயனப் பொருட்கள் சுரப்பது நாம் போட்டிகளுக்காகவும், தேர்வுகளுக்காகவும், கடும் பயிற்சி செய்வதற்கான உந்துதல்/ பரிசு (incentive) ஆக அமைகிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘Dopamine Reward Pathway’ என்று கூறுவார்கள். இன்னும் ஒரு படி சென்று, நாம் இந்தக் காரியங்களை எல்லாம் ஆராய்ந்து பார்ப்போம்.
இந்த சந்தோஷக் chemicalஐ இயற்கையாக சுரக்க வைப்பதற்கு மூன்று காரியங்கள் இன்றியமையாததாகும்:
- ஒரு குறிக்கோள் (Goal)
- கடுமையான பயிற்சி (Training)
- வெற்றி (Success)
ஆனால் எல்லா மனிதர்களாலும், இந்த மூன்றையும் சேர்ந்து செய்து வெல்ல முடியாது. சிலர் குறிக்கோளுடன் பயிற்சி செய்தும், தோல்வி அடைந்து விடலாம். சிலருக்குக் கடுமையான பயிற்சி செய்வதே பிடிப்பதில்லை. ஆனால் எல்லோருக்கும் இந்த சந்தோஷக் Chemical அதிகம் சுரக்க வேண்டும் என்று ஆசை! இது எப்படி சாத்தியமாகும்? இதற்காகவேதான் விரைவாக முன்னேறும் இந்த உலகில் மனிதன் புதுப்புது விநோதங்களை மனிதன் கண்டுபிடித்து வருகிறான். சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- வீடியோ கேம்ஸ் – Computer games, Play stations, Xbox, etc.
- சூதாட்டம் – Gambling
- புகை பிடித்தல் – Nicotine
- கிரிக்கெட் பெட்டிங் – Cricket Betting
- ஆபாசப் படங்கள் – Pornography
- ஆல்ககால் – Alcohol -Beer, wine etc.
- கஞ்சா – Cannabis (Marijuana)
- ஓப்பியம் – மார்ஃபின், ஃகெராயின்
- தூக்க மாத்திரைகள் – டயஸிபம், அல்பிரஸோலம்
- புதிய ரக லீகல் ஹைஸ் (Legal Highs)
- விறுவிறுப்புப் படங்கள் – Thrills, Horror films
- அபாய விளையாட்டுகள் – Thrill seeking dangerous games, [Bungee Jumping, Roller Coaster ride, Mountain bike rider, Giant wheel etc.]
- திருமணத்துக்கு முன் உறவு – (Pre-marital affair)
- விபச்சார உறவு (Extra-marital affair)
- விபச்சார விடுதி (Prostitution)
இந்த பட்டியலுக்கு முடிவேயில்லை. அநேகக் காரியங்களைப் புதிது புதிதாகக் கண்டுபிடித்து வருகின்றனர். கடும் முயற்சி செய்து, வியர்வை சொரியக் கிடைக்கும் வெற்றிதான் உண்மையிலேயே ‘இயற்கையாக’ நமக்கு கிடைக்கப்படும் சந்தோஷம் (“Natural Highs”). நமது உடலுக்கும் ஆரோக்கியம்.
ஆனால் இப்படி கடின உழைப்பு இல்லாமல் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் இந்த சந்தோஷம் மனிதருக்கு ‘அடிமைத்தனத்தைத்’ தான் கொண்டுவரும். எளிதில் கிடைத்த சந்தோஷம் (மேலே உள்ள பட்டியல்), நாளடைவில் பிரச்னைகளிலும், துன்பங்களிலும் தான் முடிவடையும். ஆகையால் நாம் எச்சரிக்கையாக இருப்போம்!
இந்த உலகம் தேடி அலைவது ‘சமாதனம்’, ‘சந்தோஷம்’. சரி, நீங்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்கலாம். இந்த சமாதானத்தை எங்கே பெற்றுக்கொள்ள முடியும்? யார் எனக்குத் தருவார்கள் என்று. நான் அனுபவித்து உங்களுக்கு சொல்லுகிறேன். இறைவன் இயேசு மட்டுமே இதனைக் கொடுக்க முடியும். அவர் யோவான் 14ம் அதிகாரமத்தில் சொல்லுகிறார் “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக”. ஆம் இது தான் நிரந்தர சந்தோஷம், சமாதனம்! இதனை எந்நாளும் எல்லோரும் மனதில் வைப்போம்!
சரி, மேலே உள்ள பட்டியலைக் கவனித்து விட்டு மற்றும் ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம். இதில் உள்ள சில காரியங்கள் பல வீடுகளில் சாதாரணமாக உபயோகப்படுத்துகிறார்கள். அப்படியானால், அவர்கள் எல்லாரும் ‘அடிமை’ ஆகி விடுகிறார்களா? உதாரணமாக, Computer அல்லது Video games விளையாடுவது, Giant Wheelல் செல்வது, கிரிக்கெட் பார்ப்பது etc. இல்லவே இல்லை. பொழுதுபோக்காகச் செய்யும் காரியங்கள் நிச்சயமாக நமக்கு மகிழ்ச்சியை உருவாக்குகிறது. அதில் தவறு இல்லை. இது எப்பொழுது அடிமைத்தனமாக மாறுகிறது என்பதை அடுத்த பகுதியில் நான் உங்களுக்குத் தெளிவாக விளக்குகிறேன்.