குழந்தைகள் குறும்புத்தனத்தில் ஈடுபடுவது இயற்கை தான். இளம் வயதினர் சில்மிஷம் செய்வதும் நாம் பார்க்கும் ஒரு காரியமாகும். அனால் பொதுவாக இந்த விளையாட்டுகள் ஒரு வரைமுறையுடன் நின்றுவிடும்.

சமுதாய கோட்பாடுகளையும், விதிமுறைகளையும் மதிக்காமல், தொடர்ந்து / மீண்டும் மீண்டும், தீய/ ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு / பெற்றோருக்கும், பெரியவர்களுக்கும் அடங்காமல் இருக்கும் சிறியோர் இந்த விதமான குணக் கோளாறுகள் (Conduct disorder) உள்ளவர்கள் என்று கூறலாம். சில உதாரணங்கள்: அதிகமாக சண்டை போடுதல், மற்றவர்களை கிண்டல் செய்தல் (Bullying), வீட்டு சாமான்களை உடைத்தல், தீ வைத்தல், மீண்டும் மீண்டும் பொய் பேசுதல், பள்ளிக்கு செல்லாமல் இருத்தல், வீட்டை விட்டு ஓடுதல், மீண்டும் மீண்டும் அடம் பிடித்தால், பெற்றோருக்கு கீழ்படியாமல் இருத்தல் etc.

ODD6

கீழ் காணும் அட்டவணையை கவனியுங்கள்:

 1. தன் வயதிற்கும் அதிகமான அடம் பிடித்தால்;
 2. பெற்றோருடன் / பெரியோருடன் தர்க்கம் செய்தல்;
 3. பொதுவாக பெற்றோர் / பெரியோர் சொல்லும் ஆலோசனைகளை கேட்பதில்லை;
 4. அவர் செய்யும் பல காரியங்கள், மற்றவர்களை அதிரப்பண்ணும்;
 5. பொதுவாக, தன் தவறுக்கு / தன் பிரச்சனைகளுக்கு, பிறர் தான் காரணம் என்று ஆணித்தரமாக கூறுவது (blames others for his own mistakes);
 6. தொட்டால் சிணுங்கி போல் இருப்பார், யாரும் ஏதும் சொல்லிவிட்டால் உடனே கோபம் வந்துவிடும்;
 7. பொதுவாகவே, கோபமாகவோ அல்லது குழப்பமாகவோ காணப்படுவார்;
 8. தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மாட்டார், பாதியில் முறித்து விட்டு தான் செய்ய வேண்டிய காரியத்தை செய்ய மாட்டார்;
 9. மற்றவருடன் சண்டை பிடிப்பது;
 10. சில வேளைகளில் உபகரணங்களை (கம்பு, செங்கல், கத்தி, கல், உடைந்த பாட்டில்) வைத்து மற்றவர்களை காயப்படுத்துவது;
 11. பெற்றோர் / பெரியோர் சொல்லியும் கேட்க்காமல், இருட்டிய பின் தன் வீடு திரும்புவான் (13 வயதிற்கும் முன்பே);
 12. கோபம் வரும்போது, வீட்டில் உள்ள சாமான்களை (கதவு, மேஜை, டிவி, iPad, Mobile etc) உடைத்து போடுதல் – பின்பு அதற்காக மனம் வருந்தலாம்/ வருந்தாமலும் இருக்கலாம்;
 13. பொருட்களுக்கு தீ வைத்து சேதப்படுத்துதல்;
 14. வீட்டில் வாழும் pet animals ஐ கொடுமைப்படுத்துதல்;
 15. சாதரணமாக களவு செய்தல்;
 16. 13 வயதிற்கு முன், பள்ளி செல்லாமல் இருத்தல்;
 17. பெற்றோர் வீட்டை விட்டு இரு முறையாவது ஓடிவிடுதல்.

 

jeshoorகுணக்கோளாறு (Conduct disorder)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *