ஆட்டிசம் 

autistic-child-playing

என் குழந்தைக்கு அட்டிசமா? என் குழந்தை மற்ற குழந்தைகளுடன் விளையாட மாட்டேங்ரானே? பள்ளியில் ஆசிரியர்கள் கூட இவன் மெதுவாகத்தான் படிக்கிறான் / எழுதுகிறான் என கூறுகிறார்கள். இவன் தனியாக உட்கார்ந்து விளையடுகிறானே என பயப்படுகிறீர்களா? இந்த ஆட்டிசம் என்பது என்ன? இது பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.

இந்த ஆட்டிசத்தில் உள்ள முக்கிய அம்சங்களாவன:

மூன்று வயது முடியும் முன்பே கீழ் காணும் அறிகுறிகள் தென்படும்:

1)  சமூகத் தொடர்பு (reciprocal social interaction)- கடினம் / அசாதாரணம்/ சமுதாய நடைமுறைகள் / ஒழுங்கு முறைகள் தெரியாது.

2) தகவல் தொடர்பு (communication difficulties) – மற்றவர்களிடம் பேசுவதில்/ கருத்துப்பரிமாற்றம் முடியாமை

3) மீண்டும் மீண்டும் நடத்தை (restricted, stereotyped, repetitive behaviour):

a) தேவையில்லதா / அற்ப காரியங்கள் மீது அசாதாரண / அளவுகடந்த அல்லது தீவிரமான விருப்பம்.

b)  இப்படிப்பட்ட காரியங்கள் மீது உறுதியான பற்று.

c)  மீண்டும் மீண்டும் ஒரே செயல்களிலும் உறுதியான பற்று (எ.கா., கை அல்லது விரல் அசைத்தல் அல்லது வளைதல், அல்லது சிக்கலான முழு உடல் இயக்கங்கள்).

d)  பொருட்களின் பகுதிகளில் தொடர்ந்து சிந்தனை (எ.கா., கார் சக்கரத்துடன் மீண்டும் மீண்டும் விளையாட்டடு.)

4) மற்றவைகள் – போபியா / பயம் / தூங்குவதில் பிரச்சனைகள் /உணவு உண்பதில் தொந்தரவுகள் / மற்றும் (சுய இயக்கிய) ஆக்கிரமிப்பு (Self directed aggression) etc.

jeshoorஆட்டிசம் (Autism)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *