மனப் பதட்ட நோய் (Anxiety Disorder)

FEAR

 சரித்திரத்தில், பயத்தினால் மரணம் அடைந்த ஒரு நபரைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் பயம் மிகவும் கொடூரத்தையும் வேதனையையும் ஒருவருடைய மனதில் உருவாக்கும் சக்தி படைத்தது. இதைப் பற்றி நாம் இங்கு காணுவோம்.

ஆபத்தை எதிர் நோக்கும் எந்த ஒரு நபருக்கும் ஏற்படும் பதட்டம் மிகவும் இயல்பானதாகும். அந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக, நமது மனமும், உடலும், இணைந்து போராடுவதற்கு ஏதுவாக இவ்விரண்டும் தயாராகுகிறது. இவ்விரண்டிலும் ஏற்படும் மாற்றங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

 மனது :  முதலாவது, பயம், நடுக்கம், நம்மைக்கவ்விப்பிடிக்கிறது. அதனைத் தொடர்ந்து அமைதியற்ற நிலை காணப்படும். மனது வேறு எந்த காரியத்தையும் யோசனை செய்யாமல், தனக்கு வரவிருக்கும் ஆபத்தை மட்டுமே நோக்கி இருக்கும். மனது விழித்திருக்கும். தூக்கம் வராது.

 உடல்நெஞ்சு பட படவென்று அடிக்கத் துவங்கும். அதனை நாம் நன்கு உணரலாம். வெகு விரைவாக மூச்சு விடத் துவங்குவோம். தசைகளின் இறுக்கத்தை உணரலாம். வியர்வையும் சொரியலாம். நாவு உலர்ந்து விடும்.

பயத்தை உருவாக்கக் கூடிய சூழ்நிலை (Circumstances) அல்லது பொருள் (Stimuli) நம்மை நோக்கி வருகிறது என்று நினைத்த உடன், நம்மை அறியாமல் (Automatic Nervous System) நம் உடலில் உள்ள Auto Pilot விபத்து வரப் போகிறது என்று நமக்கு RedSignal ஐ அபாய எச்சரிக்கையை உடல் மற்றும் மனதில் அனுப்பி விடுகிறான். இது சில வினாடிகளில் செயல் படத் துவங்குகிறது. கீழே உள்ள பட்டியலின் காரியங்கள் ஆபத்தை எதிர் நோக்கும் போது உங்களுக்கு நிகழ்ந்துள்ளதா என்று பாருங்கள் :

 • நெஞ்சுவலி
 • நெஞ்சை சுற்றி மிக அழுத்தம்
 • மூச்சு திணறல்
 • நெஞ்சு படபட என அடித்தல்
 • தலை / கழுத்து வலி
 • நடுங்குதல்
 • தலை சுற்றுதல்
 • கண் பார்வை மங்குதல்
 • விரல்களில் வித்தியாசமான உணர்வு (Tingling sensation)
 • உடல் சுடுவது போலவும், குளிர்வது போலவும் உணர்வு
 • தொண்டை அடைத்தது போல் உணர்வு
 • வாந்தி வருவது போல் உணர்வு அல்லது வாந்தி எடுத்தல்
 • கழிப்ழிப்பறை  செல்ல வேண்டும் போல உணர்வு

மனதளவில் கீழ் கண்ட எண்ணங்கள் அவர்கள் மனதில் ஓடலாம்:

 • “எனக்கு மாரடைப்பு”
 • “நான் சாகிறேனே”
 • “என்னால் மூச்சுவிட முடியவில்லை”
 • “எனக்கு மயக்கமாக வருகிறது”
 • “தலையிலே ஏதோ செய்யுது”
 • “என்ன நடக்குதென்றே புரியவில்லை”
 • “அதிக நெஞ்சுவலி”

பொதுவாக இப்படியாக இந்த நிலையில் இருப்பவரை அவசர சிகிச்சைக்கு (Casualty) உறவினர்கள் அழைத்துச் செல்லலாம். இதனை மக்கள் தவறாக மாரடைப்பு (Heart attack) என நினைத்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்லாம். ஆனால் பல பரிசோதனைகளுக்குப் பின்பு மருத்துவர்கள் உறவினர்களிடம், ‘இவருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை’ அல்லது ‘வயிறு வலி’ மாத்திரைகள் கொடுத்து அனுப்பிவிடலாம். இவ்விதம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை எடுப்பது தவறு அல்ல. ஆனால் இதே போன்று மீண்டும் மீண்டும் மனப் பதட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மறுபடியும் மருத்துவமனை செல்வதினால் பயன் இல்லை. மாறாக அவர்கள் மன நல மருத்துவரை அணுக வேண்டும்.

jeshoorமனப் பதட்ட நோய் (Anxiety)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *