நாம் திடீர் மன அழுத்தம் பற்றி பார்த்தோம். இந்த மன அழுத்தம் சில நாட்களில் குணமாகவில்லையென்றாலோ அல்லது பிரச்னைகள் (Stressors) அதிக காலம் நீடித்தாலோ, மன அழுத்தம், மனக்கவலை நோயாக மாறிவிட வாய்ப்புகள் இருக்கின்றன.

dark stress

மனக்கவலை என்பது நாம் எல்லோரும் அன்றாடம் அனுபவிப்பது. ஆனால் மனக்கவலை என்பது மனக்கவலை நோயாக மாறி விடக் கூடாது. இந்த மனக்கவலை நோய், நம்மிடம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது எப்படி? இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் பட்டியலைப் பாருங்கள்:

  • மனக் கவலை
  • உடலில் பெலன் அற்றுப் போன நிலை
  • மகிழ்ச்சியற்ற நிலை

இந்த 3 உணர்வுகளும் உங்களுக்கு உள்ளதா என்று எண்ணிப் பாருங்கள். இதை நான் சற்று விவரித்துச் சொல்லுகிறேன்.

உடல்பெலம் இல்லாதது போல் ஒரு உணர்வு ஏற்படும். கொஞ்சம் எளிதான வேலை செய்தால் கூட முழு பெலனும் முடிந்து விட்டது (Easy fatiguability) போல் தோன்றும். சிலர் கஷ்டத்தின் மத்தியில் கூட மிகவும் கடினத்துடன் வேலை செய்வார்கள். மற்றும் சிலர் என்னால் இனி முடியாது என்று படுத்துக் கொள்வார்கள். இந்தநிலையில் இருப்பவர்களுடைய பெற்றோர் / உறவினர்கள் அவர்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த நபர் மனக்கவலை நோயினால் பாதிக்கப்பட்டதினால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று நாம் அறிந்து அவரை மென்மையாக நடத்த வேண்டும்.

இப்பொழுது 2ம் பட்டியலையும் கவனியுங்கள்:

o   உறக்கம் இன்மை அல்லது அதிக உறக்கம்

o   பசியின்மை அல்லது அதிகப் பசி.

o   முழுமனதுடன் செயல் புரிய இயலாமை (Reduced attention & Concentration).

o   தன்னம்பிக்கை அற்ற நிலை (Reduced Self Esteem)

o   தற்போது உள்ள கடுமையான சூழ்நிலை மாற வேமாறாது என்கின்ற மனப்பாண்மை (ideas of Hopelessness & Helplessness).

o   தற்கொலை எண்ணங்கள் மனதில் ஓடலாம்.

o   எதிர் காலம் இருண்டு விட்டதே, அதை மாற்றவே முடியாது என்கின்ற நினைவு அலைகள்.

மனக்கவலை மட்டும் உள்ள நபருக்கு 2 ம் பட்டியலில் உள்ள ஒன்றுமே இருக்காது, ஆனால் அது நோயாக (மனக் கவலை நோய்) மாறும் பொழுது தான், 2ம் பட்டியலில் உள்ள காரியங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அதை விரைவாக கண்டு பிடித்து மன நல மருத்தவரிடம் காண்பிக்க வேண்டும்.

இரவில், சிலர் படுக்கையில் படுத்து இருப்பார்கள். ஆனால் தூக்கமே வராது. இரவு முழுவதும் ‘இந்த காரியம் ஆகாது’, ‘நம்மால் முடியாது’ என நம்பிக்கையிழந்த சிந்தனைகளில் முழ்கியிருப்பார்கள். சில மணி நேரம் மட்டுமே தூக்கம் வரும், சிலருக்கு உடனே தூக்கம் வரும் ஆனாலும் காலை விடியும் முன் (சுமார் 3-4 மணிக்கு) விழித் தெழுந்து விடுவார்கள். எழுந்தவுடன் சிந்தனை முழுவதும்  கவலையுடையதாகவே இருக்கும். வேறு சிலருக்கு அதிகமான தூக்கம் வரும். இரவிலும் தூக்கம். பகலிலும் தூக்கம்.

பொதுவாக, மனக் கவலை நோய் வரும் போது, பசி ஏற்படவே செய்யாது. மிகவும் குறைவாகச் சாப்பிடுவதினால், உடல் எடை குறைய வாய்ப்புகள் உள்ளன. சராசரியாக 5 kgs முதல்10 kgs வரை எடை குறையலாம். இந்த எடை குறைவையும் அவர்கள் அணியும் ஆடை பெரியதாக இருப்பதையும் நீங்கள் காணலாம்.

அதே சமயம், சில நபர்களுக்குப் பசி அதிகம் ஏற்படலாம். அவர்கள் நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மனம் அலை பாய்ந்து கொண்டே இருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் அதிக கவனம் செலுத்த முடியாது. ஒரு மணி நேரம் வாசிக்க வேண்டும் என்று நினைத்தால் சுமார் 5 – 10 நிமிடத்துக்குள் நினைவு எங்கோ ஓடி விடும். TVயில் பார்த்துக் கொண்டிருக்கும் கதையின் தொடர் புரியாது.

தன் நம்பிக்கையிழந்த ஒரு நபராக மாறி விடுவீர்கள். நம்மால் ‘ஒரு காரியத்தை நன்றாகச் செய்யவே முடியாது’ நான் தகுதியற்றவன்; நான் ஒரு காசுக்கும் பெறாதவன்’ போன்ற எண்ணங்கள் நம் மனதில் உறைந்த பனி போல் ஆட்கொண்டு விடும். இந்தச் சூழ்நிலையிலிருந்து என் கஷ்டங்கள் எல்லாம் மாறவே முடியாது என்றும் இதிலிருந்து என்னைக் காப்பாறுபவர் யாரும் இல்லை என்றும் எண்ணங்கள் உதித்து விடும். எதிர்கால நம்பிக்கையும் அற்று விடும்.

இப்படிப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வாடி வருகின்றனர். சிலர், அழுது புலம்புவார்கள். சிலர், தன்னுடைய நம்பிக்கைக்குரிய நபரிடம் தன் துயரத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், பெரும்பாலானமக்கள், தன் துயரைத் தனக்குள்ளே அடக்கி வைத்துக் கொள்வார்கள். இது தான் அதிக வேதனைக்குரிய விஷயம். இப்படிப்பட்ட மன வேதனையில் வெந்து கொண்டிருப்பவர்களே, மனக்கவலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். It is a psychiatric emergency. இவர்களுக்கு அவசர மனநல சோதனையும் மருந்துகளும் உடனடியாகத் தேவையாக உள்ளது.

மீண்டும் மனக் கவலை நோய் :

மனக் கவலைநோயைப் பற்றி பார்த்தோம். அது குறைந்த பட்சம் 2 வாரங்களாவது நீடிக்கும். மனநல மருத்துவரின் ஆலோசனையாலும் மருந்து மாத்திரையாலும், இது முழுமையாக சுகம் அடையும்.

DEPRESSION-facebook

மனக் கவலை நோய்க்கு மருத்துவம் செய்யாத பட்சத்தில், இந்த நோய் சுமார் 3 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்க வாய்ப்புகள் உள்ளன. அதன் பிறகு, சுகம் அடையலாம். ஆனாலும் குறுகிய காலத்தில் மீண்டும் மனக்கவலை நோயினால் பாதிக்கப்படலாம். இந்தக் காரணத்தினால், நாமோ, அல்லது நம்மைச் சார்ந்திருக்கும் உற்றார் உறவினர்களக்கு இப்படிப்பட்ட மனக் கவலை நோய் வரும் பொழுது, உடனடியாகக் கண்டு கொண்டு மன நல மருத்துவரை அணுகவும்.

நீடித்த மன சோர்வு/ டிஸ்தைமியா (Dysthymia) :-

நீடித்த மன சோர்வு உடையவர்களுக்கு மனக் கவலை நோயைக் குறித்து கற்றுக் கொண்ட அம்சங்கள் கிடையாது. இவர்கள் பல வருடங்களாக (குறைந்தபட்சம் 2 வருடங்கள்) மனச் சோர்வு உடையவர்கள். ஒரு வருடத்தில் சில நாட்கள் அல்லது சில வாரங்கள் மட்டுமே இயல் பான மன ரம்யமுடன் (Normal / Happy Mood) இருப்பவர்கள். கீழ் கண்ட பட்டியலைப் பாருங்கள் :

o   மனச்சோர்வு – 2 வருடங்களுக்குமேலாக

o   உடல்உளைச்சல், எளிதாகபெலன்அற்றுப்போதல்

o   மகிழ்ச்சியானசம்பவத்தின்போதும்சோர்வுடன்இருத்தல்.

o   எதைக்குறித்தும்திருப்திஅடைவதில்லை.

o   தூக்கமின்மை

o   அன்றாடவேலையைஎப்படியாவதுமுடித்துவிடுதல்.

இது ஆங்கிலத்தில் டிஸ்தைமியா (Dysthymia), டிப்ரஸ்ஸிவ் நியுரோஸிஸ் (Depressive Neurosis) அல்லது நியுராட்டிக் டிபரஷ்ஷன் (Neurotic depression) என்று அழைக்கப்படும்.

இந்த மனச் சோர்வின் தன்மை மிகவும் மென்மையானது. ஆனால் இது பல வருடங்களாக நீடிக்கும். ஆகையால் இந்த வகையான சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய காரியங்களையும் சாதனைகளையும் படைப்பது மிகவும் கடினமானதாகும்.

 

 

 

 

jeshoorமனக்கவலை நோய் (Depression)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *