child-and-flowers

குடும்பத்தில் உள்ள ஒருவர் மரணத்தை சந்திக்கும்போது, அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படுவார்கள். இதில் சிறுகுழந்தைகளும்? இளம் வயதினரும் அடங்குவார்கள். நம்முடைய சமுதாயத்தில், நெருங்கிய ஒருவருடைய இழப்பினால், குழந்தைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தவறான எண்ணம் கொள்கிறோம். சிறு குழந்தைகள் கூட அந்த இழப்பினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மருத்துவர்களின் கூற்று. ஆதலால் குழந்தைகளுக்கும் இள வயதினருக்கும் தங்கள் மனதிலுள்ள துக்கத்தை பகிர்ந்து கொள்ளவும் அதனை வெளியே கொண்டு வரவும் ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கும் இளம் வயதினரும் தங்கள் துக்கத்தை வித்தியாசமாக வெளிப்படுத்துவார்கள் என்பதை பெரியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு குழந்தையும் தன் துக்கத்தை வெளிப்படுத்தும் விதம் வித்தியாசமாக இருக்கும். அதோடுகூட, ஒரு குழந்தையுடைய துக்கமும் பெரியவருடைய துக்கமும் அதிகமாக வேறுபட்டிருக்கும் என்பதனை நாம் மனதில் கோள்ள வேண்டும்.

காலக்கட்டம் :-

சிறு குழந்தைகளும் இளம் வயதினரும் தாங்கள் வளர்ந்துவரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மறைந்த தங்கள் உறவினரை அடிக்கடி நினைவு கொள்வார்கள்.

சிறுவர்களுக்கு, பெரியவர்களைப் போல உணர்ச்சிகளில் (Emotions) முதிர்ச்சி ஏற்படாததினால், மறைந்தவரின் மேல் உள்ள துக்கம் சில நிமிடங்கள் அல்லது ஒரு சில மணி நேரம்தான் நீடிக்கும், மற்ற நேரங்களில் அவர்கள் விளையாடுவதில் தான் கவனம் செலுத்துவார்கள். இது தவறு அல்ல. வளர்ந்து வரும் சிறுவர்களுக்கு இது இறைவனுடைய படைப்பால், இயல்பாக அமைத்த ஒரு குணாதிசயமாகும். இவ்விதமாக, உணர்ச்சிகளில் முதிர்ச்சி அடையாத சிறு குழந்தை தன் துக்கத்திலிருந்து தற்காலிகமாக விடுபட்டுத் தன் மனதை சந்தோஷம் தரும் மற்ற காரியங்களில் மனதை செலுத்துவது ஒரு பாதுகாப்பான அம்சமாகும்.
குழந்தையிடம் பேசுதல் :-

பெரியவர்கள் ஒரு குழந்தையிடம் மறைந்த ஒருவரைப் பற்றி பேசுவது கடினமான காரியம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும், அவர்கள் மறைவைப் பற்றி பேசுவது சிறுவர்களின் மனதைப் புண்படுத்தும் என நினைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறான காரியமாகும். மறைந்த தன்னுடைய தகப்பனாரோ, தாயாரோ அல்லது சகோதரனோ சகோதரியோ அல்லது மற்ற நெருங்கிய உறவினர்களோ, யாராக இருந்தாலும், அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதையும், எப்படி இறந்தார்கள் என்பதையும், இப்பொழுது எங்கு அவரை வைத்திருக்கிறார்கள் என்பதையும் ஒளிவு மறைவு இல்லாமல் அந்த சிறுவருக்கு உண்மையாகத் தெரியப்படுத்த வேண்டும்.

இப்படியாக நேர்மையாக சிறுவருக்கு சொல்லவில்லையென்றால், இழந்த துக்கத்தை கிரகிக்க முடியாமல் (not acknowledging grief) ஆழ்மனதில் இந்த துக்கத்தை பூட்டி வைப்பார்கள். இந்த சிறுவனுடைய உணர்ச்சிகள் பல வருடங்கள் கடந்தாலும் முதிர்ச்சி அடையாமல் பல பல மனக்குழப்பங்களிலும், மன வேதனைகளிலும் கொண்டுபோய் விடும்.

நினைவில் கொள்பவை :

  • சிறு குழந்தைகளும் இளவயதினரும் இழப்பினால் மனதில் வேதனையை அனுபவிப்பார்கள்.
  • அவர்களிடம் மறைக்காமல், நேர்மையாக அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
  • ‘அப்பா தூங்குகிறார்’, ‘அப்பா வந்து விடுவார்’ போன்ற பொய்யாக நம்பிக்கையை சிறுவர்களுக்கு கொடுக்கக்கூடாது.
  • துக்கத்தை வெளிப்படுத்தும் விதம்? ஒவ்வொரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் வித்தியாசப்படும்.
  • சிறுவர்கள் மறைந்தவர்களைப் பற்றி பேசுவதற்கும் அவர்கள் எப்படி வேதனையை உணருகிறார்கள் என்றும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்,
  • சில / பல வருடங்கள் கழித்து கூட வளர்ந்து கொண்டிருக்கிற சிறுவர் / சிறுமியர் தங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.
smsimonkகுழந்தைகளும் குட்-பை சொல்ல வேண்டுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *