Gaming addiction

நான் Londonல் உள்ள குழந்தைகள் மற்றும் இளம் வாலிபருக்கான மன நல Clinicல் (CAMHS – Child and Adolescent Mental Health Service) வேலை பார்க்கும் பொழுது , 9 வயது மட்டுமே நிரம்பிய ஒரு சிறுவனை என்னிடம் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அவன் பெற்றோர்கள் என்னிடம் அவனது முரட்டுக் குணத்தைப் பற்றியும் யாருக்கும் கீழ்படியாததைப் பற்றியும் அழாதக் குறையாக கூறினார்கள். பள்ளியில் கூட மற்ற மாணவர்களைக் கேலி செய்தல் (bullying), ஆசிரியர்களுக்கு அடங்குவதில்லை, பாடத்தை தொடுவதேயில்லை என பல complaintsஐ என்னிடம் வைத்தார்கள்.

நான் பெற்றோரிடமும், அந்தப் பையனிடமும் நன்கு, தனித் தனியாக, விசாரித்து விட்டு கண்டு பிடித்தது என்னவென்றால், இந்த பையன் சிறு வயதிலிருந்தே வீடியோகேம்ஸ்ல் அதிக நாட்டம் வைத்திருந்தான். பெற்றோர்களும், தங்களைத் தொல்லை செய்யக் கூடாது என்பதற்காக வீடியோ கேம்ஸ் வாங்கிக் கொடுத்தார்கள். அவன் அதிக நேரம் அதில் விளையாடி ஜெயித்து விட்டதால், பெற்றோர் அவன் மிகவும் அறிவாளி (‘Intelligent’) என நினைத்து மிகவும் கடினமான உயர் தர விலை கூடிய gamesஆன Play station 1/ 2/ 3, Xbox, Wii போன்றவற்றை படிப்படியாக வாங்கிக் கொடுத்தார்கள்.

video-game-kid

அவன் பல மணி நேரங்கள் அதிலே செலவழித்ததால் பெற்றோருக்கு கவலை இல்லாமல் தங்கள் சொந்த அலுவலை கவனித்தார்கள். அந்த 9 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் ஒரு வாரத்திற்கு எத்தனை மணி நேரம் Games விளையாடினான் என்பதைக் கீழே கவனியுங்கள்:

காலை மாலை மொத்தம்
திங்கள் 1 2 3
செவ்வாய் 1 2 3
புதன் 1 2 3
வியாழன் 1 2 3
வெள்ளி 1 2 3
சனி 6 6 12
ஞாயிறு 6 7 13
40

ஒரே வாரத்தில் சுமார் 40 மணி நேரம் Games ஆடி வருவதால், அவன் மனம் முழுவதும் Games உலகில் தான் இருக்கும். Games விளையாடாத மற்ற நேரங்களில் கூட (School Time), அவன் நினைவு முழுவதும் Games என்னும் மாய உலகத்தில் தான் இருக்கும் (‘Preoccupation’). பள்ளியில் எந்த காரியம் செய்தாலும் எளிதில் கோபம் வரும். ஆசிரியர்களுக்கும் அடங்க மாட்டான். இந்த பையன் Gamesக்கு அடிமையாகி விட்டான் என்று கூறலாம். மட்டுமல்ல, அவனுக்கு நன்னடத்தையும் இல்லாமல் போய்விட்டது.   இதனை தான் கேம்ஸ் அடிக்ஷன்(Games addiction) என்று சொல்லுகிறோம்.

 

 

 

jeshoorGaming Addiction

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *